“எம்ஜிஆரின் படத்தை பார்த்து இவர்தான் தலைவர் இவர்தான் முதல்வர் என்று என்னுகின்ற இளைஞர் கூட்டம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளையும் வெற்றி பெற்று எடப்பாடி யார் கையில் ஒப்படைப்போம்” என்று முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசியது தான் ஹைலைட்டான விஷயமே!
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா விருதுநகர் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கழக அமைப்பு செயலரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது,

அதிமுக கழகப் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான புரட்சித்தமிழர் எடப்பாடி ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சிக்கு உட்பட்ட கழக நிர்வாகளுக்கு புது ய உறுப்பினர் படிவத்தை எடப்பாடி யார் என்னிடம் அளித்தார் இன்று அதை உங்களுக்கு அளிக்கும் நிகழ்ச்சி தான் .இந்த உறுப்பினர் சீட்டு என்பது இயக்கத்தில் தொண்டர்களுக்கு அது ஒரு பாதுகாப்பு கவசம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இருந்து நான் கட்சியில் உழைக்கிறேன் என்பதற்கு இது ஒரு அடிப்படைச் சான்று. தற்பொழுது உள்ள நிர்வாகிகள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா புரட்சித் தமிழர்எடப்பாடி யாரின் படம் பதித்த புதிய உறுப்பினர் அட்டையை வைத்திருக்க வேண்டும்.




அதிமுக தொண்டர்கள் தெளிவானவர்கள் . இயக்கத்தின் மீது பற்று பாசம் ,வீரம் ,வேகம் . எதையும் சாதிக்கும் எதிரிகளை வீழ்த்த கூடிய களப்பணியில் நின்று போராட கூடியவர்கள் . போராட்டத்தை எல்லாம் சந்தித்து நாடாளுமன்ற தொகுதியில் கரணம் தப்பினால் மரணம் என்ற வகையிலே இங்கே திமுக கூட்டணி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் தேமுதிக கூட்டணியில் விஜய பிரபாகரனுக்கு நமது கழக நிர்வாகிகள் கடுமையாக வெற்றிக்கு போராடினார்கள். விருதுநகர் பாராளுமன்றத்தில் தேமுதிக தான் வெற்றி பெறும் என்று உலகமே எதிர்பார்த்தது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட சதியில் மோடி வேண்டும் என்று ஒரு அணியும், மோடி வேண்டாம் என்ற ஒரு அணியும் என்று தமிழக மக்கள் பிரிந்த நிலையிலும்,நாம் அதிக வாக்குகளை பெற்றஎன்றுமே நம்முடைய வெற்றி நிச்சயம் ஆக்கப்படும் என்றால் அது உங்களுடைய களப்பணிதான். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40 தொகுதியிலும் தோற்றுவிட்டது என்று தொலைக்காட்சிகளில் தினந்தோறும் பட்டிமன்றம் நடத்துகிறார்கள்.


அந்த அரசியல் மேதைகளுக்கு எல்லாம் நாங்கள் சொல்வது என்ன வென்றால் 40 தொகுதிகளில் அதிமுக வலுவாக தடம் பதித்துள்ளது எவ்வளவு பெரிய சோதனைகளிலும் அதிமுக ஓட்டுகளை பெற்றிருக்கிறோம். வெற்றி என்பது அதிமுகவுக்கு எளிது. பல நேரங்களில் அதிமுக பல சோதனைகளை சந்தித்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் பென்னகரம் பகுதியில் அதிமுக டெபாசிட் இழந்தது. அன்று திமுக ஆளுங்கட்சி . பின்பு அதிமுக நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக அமோக பெற்றது .அதில் தேமுதிக எதிர் கட்சியாக வந்தது. திமுகவுக்கு மூன்றாம் இடம் தான். கிடைத்தது ஆர் கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் புரட்சித்தலைவி அம்மா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு திமுக டெபாசிட் வந்தது 1996 இல் அதிமுக 4,சீட்டு 1999 திமுக 2 சீட்டு ,1980 இல் புரட்சித்தலைவர் காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகாசி கோபிசெட்டிபாளையம் மற்றும் வெற்றி பெற்றோம் .ஆக நமக்கு வரலாறு இருக்கிறது. அதிமுக வீழ்வது போல் தெரியும். ஆனால் வீறுநடை போட்டு எழுகின்ற இயக்கம் அதிமுக. புரட்சித்தலைவி எம்ஜிஆர், புரட்சித்தலைவி , புரட்சித்தமிழர் எடப்பாடியார் நமக்கு வீரத்தை ஊட்டி கொள்கைகளை வளர்த்த மலர் கூட்டம் தான் அதிமுக திமுக என்பது ஒரு மாயை. திமுகவுக்கு தனிநபர் ஓட்டு வாங்கி கிடையாது. பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய ஒரு ஓட்டு வங்கி அதிமுகவுக்கு இரட்டை இலையில் ஓட்டு போட இன்றும் கோடிக்கணக்கான பேர் உள்ளனர்.

எம்ஜிஆரின் படத்தை பார்த்து இவர்தான் தலைவர் இவர்தான் முதல்வர் என்று என்னுகின்ற இளைஞர் கூட்டம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. புரட்சித்தலைவி அம்மா படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி ஏழை பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர் என்று அள்ளிக் கொடுத்து ஏழைகளை வாழ வைத்தவர். அவர் வழியில் வளர்த்த அண்ணா திமுக கழகம் எடப்பாடியார் கையில் இன்று பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது .இந்த இயக்கத்தை சமுதாய வளைதளங்களில் தவறாக பேசி கட்சியை அழிக்க நினைத்தால் அது நடக்கவே நடக்காது. அதிமுக தொண்டர்கள் எல்லாவற்றையும் பார்த்து வளர்ந்தவர்கள் . மதத்தைச் சொல்லி, ஜாதியை சொல்லியும் தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் நமது வெற்றியை தடுத்தது. சில நேரங்களில் அது வெற்றி பெறலாம் .பல நேரங்களில் அது எடுபடாது .மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விழித்துக் கொண்டார்கள் யாருக்கு ஓட்டு போட்டால் நமக்கு நன்மை கிடைக்கும் என்று நடைபெற்ற எம்பி தேர்தலுக்குப்பிறகு மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் மக்கள் சீரும் சிறப்புடன் வாழ வேண்டும். வேலையில்லாத திண்டாட்டம் குறைய வேண்டும். விலைவாசி குறைய வேண்டும். என்றால் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.ரவுடிசம் போதை இனக் கலவரம் சாதி பேதம் இல்லாமல் மக்கள் வாழ அதிமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு தலையாக கடமை உங்களது எங்களது கடமை.

தமிழ்நாட்டுமக்கள் இன்று விழித்து விட்டார்கள். குற்றங்கள் எல்லாம் பெருகிவிட்டது. காரணம் என்னவென்றால் யாருக்கும் யாரைக் கண்டும் பயம் இல்லை. ஆட்சியாளர்களை கண்டு குற்றவாளிக்கு பயமில்லை .ஆகவே முதலமைச்சர் இப்போது இருக்கின்ற பிரச்சனைகளை கடுமையாக கையாள வேண்டும் . சிங்கார சென்னையில் ரவுடிகளின் பயமில்லாமல் பொதுமக்கள் நடமாட காவல்துறைக்கு முழுவதுமாக சுதந்திரம் கொடுக்க வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா எடப்பாடியார் பக்கத்தில் இருந்த காவல்துறை தான் தற்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் கையில் இருக்கிறது. எனவே பிரச்சனை முடிக்க நடவடிக்கை எடுங்கள். அதற்காக தான் அ திமுகவும் போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே வாக்காளர்களை சந்திக்கின்ற நமது கழக நிர்வாகிகள் இன்றே களத்தில் இறங்கி செயல்படுங்கள் வெற்றி என்பது யாருக்கும் நிரந்தரமல்ல அதிமுக வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் அமோக வெற்றி பெரும் -அதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதியில் வெற்றி பெற்று வெற்றியை எடப்பாடியாரின் கையில் ஒப்படைப்போம். அண்ணா திமுக இயக்கத்தில் இருப்பது பெருமை உழைப்பது பெருமை வெற்றிக்கு உழைப்பது அதை விட பெருமை.புரட்சித்தலைவி ஆட்சியில் ஒரு லட்சம் கழக நிர்வாகிகளுக்கு பச்சை மையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை வழங்கினார்கள். அதே அதிகாரத்தில் நீங்கள் மீண்டும் வரவேண்டும் என்றால் சமுதாய சேவைகளை அதிகம் செய்ய வேண்டும். வயநாடு நிலச்சரிவில் கடுமையாக பாதிப்படைந்த கேரளா அரசுக்கு அதிமுக கட்சி சார்பில் புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்கள்.எனவே என்றுமே கொடுக்கின்ற கட்சி அண்ணா திமுக இதனை மனதில் நினைவுபடுத்தி நீங்கள் செயல்படுங்கள் உங்களுக்கு பக்கபலமாக நான் என்றும் நிற்பேன். விருதுநகர் மாவட்டத்தில் முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்கள் பிரச்சனையும் தீர்த்து வைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெல்லாம் சரி செய்ய.அதிமுகவை ஆளுங்கட்சியில் அமர வைக்க சூளுரைப்போம் வென்று காட்டுவோம் என்று பேசினார்..,

இந்தக் கூட்டத்தில்மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வக்கீல் எஸ் ஆர் விஜயகுமரன்,மேற்கு மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எஸ் கே முத்து பாண்டியன், மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் எஸ் என் பாபுராஜ், சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி வீ.ஆர்.கருப்பசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் (மேற்கு ஒன்றிய செயலாளர் லயன் என்றலட்சுமி நாராயணன் ,தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி, திருத்தங்கல் மேற்கு பகுதி செயலாளர் சரவணகுமார், திருத்தங்கள் கிழக்கு பகுதி செயலாளர் எம் பி கிருஷ்ணமூர்த்தி,சிவகாசி மேற்கு பகுதி செயலாளர் வீ. கருப்பசாமி பாண்டியன், சிவகாசி கிழக்கு பகுதி செயலாளர் சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கே கலாநிதி முன்னாள் நகர் மன்ற தலைவர் சாந்தி மாரியப்பன்,மேற்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்கள் எம் எஸ் செல்வகுமரன், எம் கார்த்திக், மேற்குமாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் அழகர்குமார், மேற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கே.டி சங்கர், ,மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவராஜ்மேற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுரணித் தலைவர் சேதுராமன்,,மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் ஆர். பாண்டியராஜன், ஸ்,விருதுநகர் நகர செயலாளர் டி பி எஸ் வெங்கடேஷ், விருதுநகர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். தர்மலிங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ஏ. மச்சராஜா ,மேற்கு ஒன்றிய செயலாளர் கே. கே கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஏ. கலைவாணன், விருதுநகர் நகர துணை செயலாளர் பா. கண்ணன். நகர அவைத் தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ் எஸ் வி செல்வராஜ்.மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராமமூர்த்தி,விருதுநகர் நகர மன்ற உறுப்பினர்கள் பூசாரி சரவணன், ராமச்சந்திரன், மிக்கேல்ராஜ்,கூரைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் மாரிக்கனி, உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


