பி.பச்சமுத்து இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்
‘விவசாயி எனும் நான்’ இத் திரைப்படத்தில் அறிமுக நாயகன் பூவரசன் மற்றும்
சரவணன் வேல, ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆத்தூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கதாநாயகன்(பூவரசன்) படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார். வில்லன் ( வேல ராமமூர்த்தி) மணல் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இதை எதிர்க்கும் கதாநாயகன்.
அதன் பின்னர் கதாநாயகனுக்கு என்ன நடந்தது என்னன்ன எதிர்ப்புகளை சந்தித்தார் என்பதே திரைக்கதை. நரேஷ் அவர்களின் பின்னணி இசையும், பாடல்களும் அருமை.
மகேந்திரனின் கேமரா கண்கள் சிறப்பாக படம் பிடித்துள்ளது. இயக்குனர் பச்சமுத்து இன்றைய நடமுறை அரசியலை பேசியிருக்கிறார்.
அறிமுக நாயகன் நாயகன் பூவரசனின் நடனம் சிறப்பு மற்ற நடிகர்களும் தங்கள் தங்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்றார் போல் படத்திற்கு மெருகேற்றி உள்ளனர்.
மொத்தத்தில் விவசாயி எனும் நான் திரைப்படம் இன்றைய அரசியலுக்கு ஒரு விவசாயின் சாட்டையடி.