• Mon. Apr 29th, 2024

ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் திரைப்பட விமர்சனம்..,

Byஜெ.துரை

Aug 20, 2023

ஸ்ட்ரீட்லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோ ஜியோவானி சிங் இயக்கி ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்.

இப்படத்தில் ஜெய்னீஷ், குணாளன், நபிஷா ஜுல்லாலுடின், மூனிலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிங்கப்பூரில் மருத்துவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியை கண்டுபிடிப்பதில் காவல்துறை அதிகாரி ஜெய்னீஷ் தீவிரம் காட்டி வருகிறார்.

இன்னொரு பக்கம் எந்த நேரமும் கம்ப்யூட்டர் கேம் விளையாடி கொண்டிருக்கும் ரியோ ராஜுக்கு அவருடைய அக்கா ரியல் கேம் விளையாடுவற்கான யோசனை ஒன்றை சொல்கிறார். ஆள் இல்லாத வீட்டின் உள்ளே சென்று அங்கிருக்கும் சில பொருட்களை யாரிடமும் மாட்டமல் எடுத்து வந்தால் அவர் தான் வெற்றியாளர் என்று சொல்கிறார் தம்பியும் (ரியோ ராஜு) ஒ.கே. சொல்கிறார்.
 
அதன்படி இருவரும் வெவ்வேறு வீடுகளுக்குள் நுழைய இருவரில் போட்டியில் வெற்றி பெற்றது யார்? என்பதும் தொடர் கொலைகளை செய்து வரும் கொலையாளி பிடிபட்டாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

படம் முடிவில் தான் நமக்கு தெரிய வரும் இது அனைத்தும் ஒரு மனிதனின் கனவு கதை என்று என்று விஷயத்தை சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.

சிங்கப்பூரில் நடக்கும் கதை திடீரென்று தமிழகத்தில் தொடர்கிறது பிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு செல்கிறது. ரியோ ராஜ் இப்படி ஒரு படத்தில் இதுபோன்ற வேடத்தில் நடித்தது நமது மனம் மறுத்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
 
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்னீஷ் கம்பீர தோற்றமாக இருந்தாலும் அவருடைய நடிப்பும் வசனங்களும் நம்மை சிரிக்க வைக்கிறது. கதாநாயகியாக நடித்திருக்கும் நபிஷா ஜுலாலுதீன் அக்கா வேடத்திற்கு பொறுத்தமாக இருக்கிறார்.
 
சைக்கோவாக நடித்திருக்கும் குணாலன் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். படத்தின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோ ஜியோவானி சிங், வெளிநாட்டு நடிகர் போல் இருந்தாலும் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.
 
ஒளிப்பதிவாளர் சலீம் பிலால் ஜித்தேஷ் எளிமையான சிங்கப்பூரை கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் பிரவீன் விஸ்வா மாலிக் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது பின்னணி இசை பரவாயில்லை.
 
படம் முழுவதும் நம்மை வாட்டி வதைத்தாலும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் அவர்களது வசன உச்சரிப்பு, நடிப்பு ஆகியவை படம் முழுக்க சிரிக்க வைக்கிறது. மொத்தத்தில் இந்த ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் திரைப்படம் ரசிகர்களை பதம் பார்த்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *