மதுரை நியூ எல்லீஸ்நகர் ஆர்.சி.சர்ச் தெரு பகுதியை சேர்ந்த நாகவேல், அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து தனது தாய், தம்பி ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்துவந்துள்ளார்.
இதனிடையே கணவன் – மனைவி இடையே தனிக்குடித்தனம் செல்வது குறித்து அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, நேற்றிரவு கணவன், மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவி சுதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து நாகவேல், மனைவியை கொலை செய்து விட்டதாக எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் சரணடைந்தார்! சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரரித்து வருகின்றனர்!