• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

ByM.JEEVANANTHAM

Apr 7, 2025

மனைவியின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வேப்பங்குளம் பெரிய தேர்வை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவருக்கும் தஞ்சையை சார்ந்த கோடீஸ்வரி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் தினேஷ் என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு கோடீஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் பெரியவர்கள் சமாதானம் செய்து வேப்பங்குளம் ராஜபாண்டியன் வீட்டிற்கு மீண்டும் குடும்பம் நடத்த கோடீஸ்வரி வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கோடீஸ்வரியை ராஜபாண்டியன் அடித்து காயப்படுத்துவது வாடிக்கையாக இருந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி வீட்டிற்கு வந்த ராஜபாண்டியன் அங்கு மனைவி கோடீஸ்வரி இல்லாததால் ஆத்திரம் கொண்டு, தெருவின் கடைசி வீட்டில் இருந்த கோடீஸ்வரியை அடித்து இழுத்து வந்து வீட்டின் சுவரில் தலையை மோதி காயப்படுத்தி இருக்கிறார். இதில் தலையில் அடிபட்ட கோடீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயிலாடுதுறை காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி விஜயகுமாரி குற்றம் சாட்டப்பட்ட ராஜபாண்டி எனக்கு ஆயுள் தண்டனை விதித்தும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார் அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓர் ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார்.