• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அதிமுகவிலிருந்து விலகி திமுக இணைய வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்

ByNamakkal Anjaneyar

Mar 3, 2024

அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல் இல்லாமல் தற்போது ஜாதி கட்சியாக, கவுண்டர் கட்சியாக மாறி வருகிறது என திருச்செங்கோட்டில் அதிமுகவிலிருந்து விலகி திமுக இணைய வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை சால்வை அணிவித்து வரவேற்று நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் பேச்சு..,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் சாலையில் உள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் தலைமை வகித்தார் ஆதிதிராவிடர் நலக்குழு ராஜவேலு ஏற்பாட்டில் வட்டூர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினருமான மதுரா செந்தில் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர் திமுகவில் இணைய வந்த இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்

இதனை தொடர்ந்து பேசிய மதுரா செந்தில் ஒரு கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கத்தில் இணைந்து உள்ளீர்கள் இனி உங்களுக்கு திமுக பக்கபலமாக இருக்கும் தற்போது அதிமுக ஜெயலலிதா எம்ஜிஆர் காலத்தில் இருந்தது போல் இல்லாமல் தற்போது ஜாதி கட்சியாக மாறி உள்ளது அதனால் அந்த கட்சியில் இருந்து ஏராளமானோர் பிரிந்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு பணிகளை வழங்கி உள்ளார் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் செய்து அரசு பணிகளில் வேலைகளையும் வழங்கி வருகிறார் எனக் கூறினார் இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் மாநில வலைதள பொறுப்பாளரும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான ரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.