• Mon. Apr 29th, 2024

பள்ளிபாளையத்தில் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு…

ByNamakkal Anjaneyar

Mar 4, 2024

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் நகர செயலாளர் குமார், பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்டவர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசகங்கர் பங்கேற்று பொதுக்கூட்டம் மேடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு என்று ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை மற்றும் பெண்களுக்கு பேருந்து இலவசம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் இவற்றிற்கெல்லாம் முட்டுக்கட்டையாக இருப்பது தமிழகத்திற்கு வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மோடியின் மத்திய அரசு மாநில சுயாட்சிகளை சீரழிப்பது பாஜக அரசின் வேலையாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் என ஒரு மாநிலம் நம் தமிழ்நாடு மாதிரி ஒரு மாநிலமாக இருந்தது இன்றைக்கு அது மாநிலமாக இருக்கிறதா? யூனியன் பிரதேசமாக ரெண்டு யூனியன் பிரதேசமா மூன்று பகுதியாக உள்ளது யாரும் எதிர்த்து கேட்க முடியாது, யாருக்கும் பதவி கிடையாது, என்று சொன்னதோட இல்ல அங்க இருக்கின்ற முக்கிய தலைவர்கள் அத்தனை பேரும் வீட்டை விட்டு வெளியே வர கூட முடியாது வீட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். சரி மக்களாவது ஃப்ரீயா இருக்காங்களான்னு கேட்டா மக்களுக்கு செல்போன் வேலை செய்யவில்லை எந்த செய்தியும் யாரும் யாருக்கும் பரிமாறிக் கொள்ள முடியாது ஊருக்கு ராணுவத்தை தாண்டி தான் போக முடியும் அப்படி ஒரு நிலை மாநிலத்தையே ஊரடங்கு உத்தரவு போட்டது போல ஒரு ராணுவ கஸடடியில் இன்றைக்கு ஜம்மு காஷ்மீர் இருக்கிறது நாளைக்கு இதே நிலைமைதான் இந்தியாவில் இருக்கின்ற மற்ற மாநிலங்களுக்கும் வரும் நாளைக்கு வந்து நீ அசைவம் சாப்பிடாதன்னு சொன்னா சாப்பிடாம இருப்போமா கட்டுப்படுவோமா முடியாது நம்முடைய உணவு நம்ம பழக்கம் நாளைக்கு நம்முடைய மொழியை நீ பேசக்கூடாதுனு சொன்னா நம்மால் முடியுமா…

நாம் நமக்கான வசதி எது நமக்கு புரியக்கூடிய மொழி எது நம் தாய்மொழி தமிழ் மொழி இந்த நிலையை நோக்கி தான் மோடி இன்றைக்கு இந்தியாவில் மெல்ல மெல்ல நகர்த்தி கொண்டு போகிறார்.

முதலமைச்சர் தளபதி அவர்கள் சொன்னது போல இந்தியா என்ற நாடு இருக்கும் ஆனால் மாநிலங்கள் இருக்காது எல்லா மாநிலத்தையும் அரசாங்கத்தை கலைப்பார்கள் மாநிலத்தை உடைப்பார்கள் எம்எல்ஏ என்கிற பதவி இருக்காது அவர் அதிபர் ஆட்சிக்கு போயிடுவார் அப்ப ஊர் எல்லாம் யாரும் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியாது சைனா மாறி எவனும் பேச முடியாது டிவில உண்மை செய்திகள் வெளியில வராது பத்திரிகையில் உண்மையில் செய்திகள் வெளில வராது நிலையை நோக்கி கொண்டு போவதற்கு தான் இன்றைக்கு மோடி துடித்துக் கொண்டிருக்கிறார் அதுதான் அந்த பாசிச பாஜக ஆட்சி அந்த வெறியின் உச்சத்தில் தான் எதிர்கட்சியை பூரா புடிச்சி உள்ள வைக்கிறதுக்கு பிடித்துக் கொண்டிருக்கிறார்….

ஜார்கண்ட் ஒரு மாநிலம் தமிழ்நாடு மாதிரி அதற்கு முதலமைச்சர் போடுகிறார் அந்த வழக்கை போட்டுவிட்டு அவரை விசாரணைக்கு கூப்பிடறாங்க ஈடித்துறை எந்த ஈடி இங்கே நம்முடைய செந்தில் பாலாஜி கைது செய்து வச்சிருக்காங்களே அதே ஈடி வருமான வரி கட்டாயமாக கூட்டிட்டு போய் கவர்னர் அலுவலகத்தில் நிறுத்தி ராஜினாமா கடிதம் கொடுக்க செய்து முதலமைச்சராக இருந்த கைது பண்ண முடியாது அதனால தான் அவர் ராஜினாமா பண்ண வச்சி அங்கேயே கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.

டெல்லியில் என்ன நிலைமை அரவிந்த் கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அவருடைய துணை முதலமைச்சர் ஒரு திட்டம் வராத திட்டத்திற்கு அவர் லஞ்சம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார் மேற்கு வங்கத்தில் மோடி எதிர்க்கிற மம்தா பானர்ஜி அவங்க மாநிலத்தில் மூன்று அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள் நம்முடைய தமிழகத்தில் நம்முடைய செந்தில் பாலாஜி சிறையில் அடைத்திருக்கிறார்கள் இன்னும் பலர் அடைக்கலான்னு அவங்க முயற்சி பண்ணினார்கள் ஆனால் நம்முடைய முதல்வர் அவர்கள் தெளிவாக சொன்னார்கள் என்னால முடியல என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பிஜேபி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதை மீறித்தான் இன்றைக்கு நம்முடைய முதல்வர் வழிகாட்டியபடி இந்தியா கூட்டணி என்பது இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தான் நம்முடைய தமிழ்நாட்டில் நம்முடைய தளபதி அவர்கள் தலைமையில் ஒரு மகத்தான கூட்டணி அமைகிறது.

நம்முடைய மாநில இளைஞரணி செயலாளர் இன்றைக்கும் தொடர்ந்து மிக அழுத்தமாக மிகத் தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் மோடிக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

தமிழ்நாட்டினுடைய பெருமையை காப்பதற்கு தமிழ்நாட்டுடைய சுயமரியாதை காப்பதற்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று அதே வழியில் நம்முடைய முதல்வர் வழியில் நாம் போராட வேண்டும் அதற்கான உறுதி ஏற்கின்ற நாள்தான் இந்த பொதுக்கூட்டம் இந்த பொதுக்கூட்டத்தில் உறுதி எடுப்போம் 40 தொகுதியையும் நாம்தான் வெற்றி பெறுவோம் இந்தியாவின் பிரதமர் யார் என்று நம்முடைய முதலமைச்சர் முடிவு செய்வார் நல்லாட்சி மலரட்டும் நம்முடைய முதல்வர் வாழ்க வாழ்க…. என அமைச்சர் பேசி முடித்தார்.

நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *