• Fri. Apr 26th, 2024

3200 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள்

ByA.Tamilselvan

Jul 9, 2022

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கிடைத்த 2 முதுமக்கள் தாழி களில் மனிதனின் அனைத்து எலும்பு களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவை குண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வுப் பணியில் 70க்கும் மேற்பட்ட முது மக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டன. கடந்த வாரம் அகழாய்வு பணியில் 30 சென்டி மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ஆதிச்சநல்லூரில் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட தரைதளம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. . கடந்த 2 மாதங் களுக்கு முன்பு சங்க கால வாழ்விடப் பகுதி மற்றும் சங்க கால நாணயங் கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆதிச்சநல்லூ ரில் கண்டுபிடிக்கப்பட்ட 3200 ஆண்டுகள் பழமையான இரண்டு முதுமக்கள் தாழியில் இருந்து மனித னின் அனைத்து எலும்புகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு எலும்புகள் மட்டுமே இருந்துள்ள நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியில் தலை, தாடை, பல், கை, கால், முதுகு எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட பற்கள் டிஎன்ஏ பகுப்பாய் விற்காக மதுரை காமராசர் பல் கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *