எஸ்.எஸ்.திசிலா, காரைக்கால் கடலோரக் காவல்படை மைய கமாண்டன்ட் சவுமய் சண்டோலா ஆகியோருடன் புறப்பட்ட கப்பல், நடுக்கடலுக்குச் சென்றது. அதிகாரிகளுக்கு கடலோர காவல்படையின் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. நடுக்கடலில், ஷவ்ர்யா கப்பலுடன், அமேயா, அன்னி பெசண்ட், ராணி துர்காவதி ஆகிய சிறிய ரக ரோந்து கப்பல்கள், சிறிய படகுகள், 2 ஹெலிகாப்டர் செயல்விளக்கித்தில் ஈடுபடுத்தப்பட்டது.

தீப்பிடித்த கப்பலை அணைப்பது எப்படி?:
கடலில் மூழ்கியவரை மீட்கும் வகையில் தகவலின்பேரில் அதி நவீன சிறிய ரக ரோந்து ஹெலிகாப்டர் அப்பகுதிக்கு வந்து, மூழ்கியவரை மீட்டுச் செல்வது, நாகையிலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் சிவகங்கை என்ற கப்பலும் அங்கு நிறுத்தப்பட்டு, அந்த கப்பலில் தீப்பிடிப்பதுபோலவும், அதனை ஷவ்ர்யா கப்பலில் இருந்து நீரை பாய்ச்சி அணைப்பது எப்படி என்பது குறித்தும், பயணிகளை காப்பாற்றுவது, அவர்களுக்கு கடலிலேயே கப்பலில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் தத்துரூபமாக செய்து காட்டினர்.
மேலும் அந்நியர்கள் நுழைந்தால் அவர்களை பிடிக்கும் முயற்சியாக சிறிய ரோந்துப் படகுகள் பயணிக்கும் விதமும் செய்துக்காட்டப்பட்டது. குறிப்பாக மீனவர்கள் உள்ளிட்டோரில் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டால் ஆளில்லா ரிமோட் மூலம் இயங்கும் ஸ்டெக்சர் மூலம் மீட்பதையும் செய்து காட்டினர். இதை நேரில் பார்த்த அரசுத்துறையினர் கடலோரக் காவல்படையினருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
துறைமுக வளாகத்தில் கடலோரக் காவல் படையினரின் முதலுவி தற்காலிக மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் கலெக்டர்கள் சோமசேகர் அப்பாராவ்(காரைக்கால்), ஆகாஷ்(நாகை), சீனியர் எஸ்பி., லட்சுமி சவுஜன்யா(காரைக்கால்), எஸ்பி., ஸ்டாலின் (மயிலாடுதுறை) மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)