• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

ByA.Tamilselvan

Jul 12, 2022

நீட்தேர்வு ஹால்டிக்கெட் இன்று காலை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சேருவதற்கான நீட் தேர்வு 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து உள்ளனர். 497 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. இன்று காலை நீட் தேர்வு ஹால்டிக்கெட் https:/neetnta.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிவுரைகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன. இணைய தளம் வழியாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] என்ற இணைய தள முகவரியிலும் தெரிவிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப் சைட் www.nta.ac.in-ல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.