• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்த் உடல்நிலை இப்ப எப்படி இருக்கு?

ByA.Tamilselvan

Jun 24, 2022

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக தலைமை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘நீரிழிவு பிரச்சனையால் விஜயகாந்தின் வலது கால் விரலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் விரல்கள் அகற்றப்பட்டன.தற்போது, மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமாக உள்ளார்.அவருடைய உடல்நிலை குறித்து பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்று தேமுதிக தலைமை குறிப்பிட்டுள்ளது.