பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

அழகர் கோவிலில் திருமணத்தில் பங்கேற்று விட்டு பெரம்பலூரில் நடைபெற உள்ள இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக செல்கிறேன். அதைத்தொடர்ந்து நாளை காலை தஞ்சாவூரில் சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட உள்ளேன்.
பிரச்சாரத்தின் போது மக்கள் வரவேற்பு குறித்த கேள்விக்கு:
மக்கள் ஆதரவு எல்லா இடங்களிலும் உள்ளது. பொதுக்கூட்டத்திற்கு சென்றால் அந்த இடத்தில் மட்டும் தான் ஆதரவு இருக்கும், கார்களின் நாங்கள் செல்லும்போது பொதுமக்கள் இரண்டு பக்கங்களும் நின்று வரவேற்பு கொடுக்கிறார்கள். அது ஆட்சி மாற்றத்திற்கான வரவேற்பு. பொதுமக்கள் சாலையில் நின்று வரவேற்கும் சூழல் ஆட்சி மீது ஏற்படக்கூடிய வெறுப்பு தெரியும்.
நெல் கொள்முதல் குறித்து எந்த விவசாயம் புகார் செய்யவில்லை என உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு:

புகார் யார் மீது கொடுக்க முடியும். நெல்லை முறையாக கொள்முதல் செய்திருக்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மூடைக்கு 40 ரூபாய் கமிஷன் கேட்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் தமிழக முழுவதும் பயிருக்காக 5000 கோடி செலவு செய்தால் சொல்கிறார்கள். அதை எங்கே செய்தார்கள் என்பது தான் கேள்வி. ஆனால் முதல்வரிடம் கேட்தால் 95% வேலையை முடித்து விட்டோம் ஐந்து சதவீதம் தான் பாக்கி என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் ஐயாயிரம் கோடி ரூபாயில் 95 சதவீத பணிகள் எங்கே முடிந்தது என விளக்கமாகக் கேட்டால் சொல்லத் தெரியாது. விவசாயிகளுக்கு குருவை சாகுபடியில் 17 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார்கள் மத்திய அரசுக்கு குழு வந்துள்ளது. அவர்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வார்கள்.
பொய் குற்றச்சாட்டுகளை விட்டு விவசாயிகளை அறுவடை செய்வதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
குருவை சாகுபடியில் தான் குளறுபடி இருக்கிறது என்று சொல்கிறோமே தவிர பொய் குற்றச்சாட்டில் அறுவை சாகுபடி நாங்கள் செய்யவில்லை.
வரக்கூடிய தேர்தல்களில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது குறித்த கேள்விக்கு:
அதில் என்ன தவறு இருக்கிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். சென்னையில் ஒரு தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் தலையிட்டு இருக்கிறார்கள். பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள் 30 லட்சம் பேர் அதில் இறந்து போனவர்கள், மீதி இருப்பதில் 20 லட்சம் பேர் வெளியூர்களில் இருக்கிறார்கள். பீகாரில் நீக்குவதை குறை சொன்னார்கள். ஆனால் தமிழ்நாட்டில் குளத்தூர் தொகுதியில் ஒன்பதாயிரம் வாக்குகள் அதிகமாக இருக்கிறது அதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆளும் கட்சியாக இருப்பவர்கள் நாளை எதிர்க்கட்சியாக போகிறார்கள் அவர்கள் இந்த குற்றச்சாட்டை சொல்வார்கள்.
வழக்கறிஞர் விவகாரத்தில் செய்தியை பார்த்து தான் எனக்கு தெரியும் என திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு:

அன்று அவர் ஒரு வேகத்தில் சொல்லிவிட்டார். பார் கவுன்சிலிலும் சென்று அந்த வழக்கறிஞரை அடித்தார்கள். திரும்பிப் பார்ப்பதற்கு அடித்தார்கள். திருமாவளவன் நாங்கள் லேசாக தட்டினோம் நல்லா அடிக்கவில்லை என்று சொன்னார் அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் என்று புரிய வேண்டும். தேர்தல் வருகிறது அப்போது நிச்சயம் இதற்கு நல்ல பதில் கிடைக்கும்.
சமூக நீதி குறித்து பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை என்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அதில் தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏறி திறப்பு விழாவிற்கு எங்களை அழைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார் சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்றால் தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)