• Sat. Mar 22nd, 2025

வீட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் மனு…

BySeenu

Mar 11, 2024

கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் அச்சங்கத்தின் பொதுசெயலாளர் வெள்ளிமலை தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில், தங்கள் சங்கம் சார்பில் ஆயிரம் குடும்பங்களின் மனுக்கள் பல்வேறு தேதிகளில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் வீட்டு வாடகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் வீடற்ற ஏழைகளுக்கும் எஸ்சி மக்களுக்கும் இலவச பட்டா வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி உடனடியாக வீட்டு வாடகை குறைக்க வேண்டும், இலவச பட்டா வீடற்ற மக்களுக்கு கிடைக்கும் வரையில் வீட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும், கொடுத்த மனுக்களை விசாரணை செய்து இலவச பட்டா வழங்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க தனிச்சட்டம் வேண்டும், அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வீடற்ற மக்களுக்கு வழங்க வேண்டும், மாநில அரசின் நிதியை முழுவதும் மத்திய அரசு, மாநில அரசிற்கே வழங்க வேண்டும், வாடகை வீடுகளின் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இச்சங்கத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.