• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சருமத்தை இறுக்கமாக்குவதற்கான வீட்டு வைத்தியம்

ByMalathi kumanan

Dec 5, 2022
  1. ஆர்கான் எண்ணெய் முடி மற்றும் தோல் பராமரிப்பு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தின் நீரேற்றம் மற்றும் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்துகிறது. இதனால் சருமம் இளமையாகவும் மிருதுவாகவும் இருக்கும்
    2.பாதாம் எண்ணெய் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் சரும நிறத்தை மேம்படுத்துகிறது புற ஊதா கலர் வீச்சினால் ஏற்படும் தோல் சேதத்தை தடுக்கிறது.
  2. அவகோடா எண்ணெய் மற்றும் வெண்ணெய் சருமத்தின் இறுக்கத்தை பராமரிக்க உதவும் முக்கிய அங்கமாகும். இதனால் தோல் தோய்வு மற்றும் தளர்வானது ஆகியவற்றை தடுக்கிறது.
  3. இந்த எண்ணங்களை சருமத்தில் தடவிய பின் சிறிது நேரம் மசாஜ் செய்த பின் மிதமான வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும். கழுவிய பின் முகத்தில் ஏதாவது ஒரு பழங்களை பேஸ்ட் ஆக நன்கு மசித்து சருமத்தில் பேக்காக அப்ளை செய்ய வேண்டும். பின் குளிர்ந்த குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிய பின் முகம் அழகாகும்.
  4. அண்ணாச்சி பழத்தின் சாரை எடுத்து தொய்வான சருமத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவவும்.
  5. காபி பொடி சருமத்தை வயதானதில் இருந்து பாதுகாக்கிறது.
    தளர்வான சருமத்தை தடுக்க சில குறிப்புகள்
  6. சருமத்தின் இளமை தோற்றத்தை பராமரிக்க வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதை தவிர நல்ல சரும ஆரோக்கியத்தை பராமரிக்க ஆன்ட்டி ஆக்சிடென்ட் உட்பட அனைத்து ஊட்டசத்துகளையும் வழங்கக்கூடிய சமச்சீரான உணவு அவசியம்
  7. சருமத்தின் ஈர பதத்தை பராமரிக்க போதுமான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். நாம் அடிக்கடி நம் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் சருமம் அழகாகும்.
  8. நம் முகத்திற்கு பொருத்தமான மாய்ஸ்ரேசரை பயன்படுத்துவது ஈரப்பதத்தை பூட்ட உதவுகிறது நீரேற்றத்தை வழங்குவதற்கு மற்றும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க இது உதவுகிறது.