• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எஸ்கேக்கு உதவிய ஹாலிவுட் நடிகை! எதற்காக?

டாக்டர், அயலான் என அடுத்தடுத்த படங்களை முடித்த நடிகர் சிவகார்த்திகேயன் பல படங்களில் நடிக்க அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். தற்போது எஸ்கே 20 படத்தின் ஷுட்டிங் ஆரம்பமாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை அனுதீப் இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் எஸ்கே 20 தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயனின் முதல் பைலிங்குவல் படமும் இது தான். இரண்டு வாரங்களுக்கு முன் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து சென்னை, டில்லி, லண்டன் ஆகிய இடங்களிலும் இந்த ஷுட்டிங் நடக்கப்பட உள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரெபோஷப்கா நடிக்க போகிறாராம். லேட்டஸ்ட் தகவல்களின் படி, சிவகார்த்திகேயன் இந்த படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு டீச்சர் கேரக்டரில் நடிக்கிறாராம். அதே சமயம் மரியா இங்கிலீஷ் டீச்சராக நடிக்கிறாராம். காமெடி சம்பவங்கள் நிறைந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இந்திய மொழிகளை மரியாவுக்கு கற்றுக் கொடுக்கிறாராம். அதே சமயம் மரியா, சிவகார்த்திகேயனுக்கு இங்கிலீஷ் கற்றுக் கொடுக்கிறாராம்.

எஸ்கே 20 படத்தில் மரியா மட்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி இல்லையாம், மற்றொரு ஜோடியும் உள்ளதாம். அது யார் என்பதை படக்குழு பயங்கர சஸ்பென்சாக வைத்துள்ளதாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடிக்கிறார்கள். தமான் இசையமைக்கிறார். இந்த படத்தை சுரேஷ் ப்ரொடக்ஷன்ஸ், நாராயணதாஸ் நராக், புஷ்கர் ராம் மோகன் ராயின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ், ஷாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா ஆகியோர் இணைந்து தயாராக்கிறார்கள்.