• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

Byகாயத்ரி

Dec 10, 2021

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு வசதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணிபுரிபவர்கள் அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 729 பேர் பணிபுரிகின்றனர். இத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் முறை தற்போது வந்துள்ளது.நாளை (11ம் தேதி) நடக்கும் 14வது மெகா தடுப்பூசி முகாமில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் அனைவரும் கலந்து கொண்டு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வசதியாக, அன்று ஒரு நாள் மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.