• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நியூயார்க்கில் தீபாவளிக்கு விடுமுறை- மேயர் அறிவிப்பு

ByA.Tamilselvan

Oct 21, 2022

அடுத்த ஆண்டு முதல் தீபாவளி திருநாள் அன்று பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்து உள்ளார்.
நியூயார்க் நகரில் வசித்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தீபாவளிக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று அடுத்த ஆண்டு முதல் (2023) தீபாவளி திருநாள் அன்று பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது தீபாவளி திருநாள் என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன். இதனால் பள்ளி குழந்தைகள் தீபாவளி தீப திருவிழாவை அறிவதற்கு ஊக்க மளிக்கும் வகையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து இந்திய தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்லால் நியூயார்க் மேயருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.