• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள வாய்க்கால்கரை. இங்குள்ள மதுரைவீரன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி ஊர்வலம் இரவு நடந்தது. அப்போது அங்கு வேடசந்தூர் போலீஸ்காரர் பாலமுருகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆத்துமேடு டாஸ்மாக் கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பாலமுருகன், அங்கிருந்தவர்களிடம் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்துமாறு கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேர் கொண்ட கும்பல், போலீஸ்காரர் என்று கூட பாராமல் பாலமுருகன் மீது பட்டாசை கொளுத்தி வீசினர். இதில் அவரது செருப்பு பிய்ந்து காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆத்திரம் அடங்காத அவர்கள் பாலமுருகனை அடித்து உதைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அவரை அசிங்கமாக பேசி, பாலமுருகனின் செல்போனை பிடுங்கி ரோட்டில் போட்டு உடைத்தனர். வண்டியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..