புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயல் மற்றும் கருங்குழிகாடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள ஜூம் ஆ பள்ளிவாசல் நிகழ்வுக்கு பள்ளிவாசலுக்கு அருகே உள்ள… விஸ்வநாதபுரம்.. வெட்டிவயல்.. சீனமங்களம்.. திட்டக்குடி.. மேல்மங்கலம்..கருங்குழி க்காடு . ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இந்துக்கள் பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லும் சீர் தட்டுகளை விநாயகர் கோவிலில் வைத்து வழிபாடு செய்து பின்னர் மேளதளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று திறப்பு விழா காணும் பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர்.

அவர்களை இஸ்லாமியர்கள் வாயிலில் நின்று சந்தனம் குங்குமம் பன்னீர் தெளித்து மகிழ்வுடன் வரவேற்ற நிகழ்வு இந்து முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சமூக நல்லிணக்க விழாவாக அனைவரும் மெச்சும்வகையில் நடைபெற்றது. காண்போரை இச்சம்பவம் நெகிழச் செய்தது

இந்த நிகழ்வுக்கு கிராமமக்கள் மேளதாளங்கள் முழங்க சீர் எடுத்து வந்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் திக்கு முக்காடச் செய்துள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.






