

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ்பிஎம்.செல்வம் தலைமை தாங்கினார் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக இந்து கோவில்களில் உள்ள நகைகளை உருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்எஸ்எஸ் மாநில நிர்வாகி வழக்கறிஞர் கணேசன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் குமார், நகர பொதுச்செயலாளர் அழகர்சாமி, வழக்கறிஞர் வேல்முருகன், இந்து முன்னணி நிர்வாகிகள் கனகராஜ், ஈஸ்வரன், கருப்பையா, முனிஸ்வரன், வேலன், மனோஜ்குமார், ஜெயபால், பகவதி ராஜ்குமார், அன்னையர்முன்னணி பூங்கொடி, இந்திரா, ஆட்டோ முன்னணி ராஜா உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
