• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இந்து சமய அறநிலைத்துறை உடனடி வேலை! சம்பளம் 26,600 முதல் 75,900 வரை.., உடனே அப்பிளே பண்ணுங்க!

ByA.Tamilselvan

May 22, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மூலமாக கோயில் நிர்வாக அதிகாரியாக இளைஞர்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு.10வகுப்பு, 12ம் வகுப்பு டிகிரி படித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். இந்த வேலைக்கு ரூ 26,600 முதல் அதிக பட்டமாக 75,900வரை சம்பளம் கிடைக்கும்.எஸ்.சி, எஸ்.டி, பிசி, எம்.பி.சி உள்ளிட்டபிரிவினரும் இந்த வேலைக்கு விண்ணபிக்கலாம். உங்கள் வயது 25 முதல் 37க்குள் இருக்கவேண்டும். இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலமாகமட்டுமே விண்ணபிக்கமுடியும். ரெசிஸ்ட்ரேசன் கட்டணமாக ரூ150ம் தேர்வு கட்டணமாக ரூ100 ம் செலுத்த வேண்டும். இத்தேர்வானது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் என இரண்டு முறைகளில் தேர்வு நடைபெறுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்கள் www.tnpsc.gov.in என்ற டி.என்.பிஎஸ்சி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 18 என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது வரும் செப்டம்பர் 11 அன்று நடைபெறகிறது.
கோயில் நிர்வாக அதிகாரியாக கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.