• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வணக்கம் சொல்லி எங்களை ஏமாற்ற முடியாது: சீறிய ஸ்டாலின்

வணக்கம் என்ற ஒரே வார்த்தையைச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே, காணொலி காட்சி வாயிலாக மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் முதன்முதலாக நீட் தேர்வு நடைபெற்றதே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். திமுக ஆட்சியில் நீட் தேர்வு நடைபெறவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் நீட் தேர்வு தமிழகத்துக்குள் நுழையவில்லை. எடப்பாடி பழனிசாமி கூறும் பொய்களைக் கேட்டு கேட்டு தமிழக மக்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

வணக்கம் என்ற ஒரே வார்ததையைச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்களையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது. தமிழ்நாடு கேட்ட எந்த நிதியுதவியும் மத்திய அரசிடமிருந்து இதுவரை வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்

வெள்ள நிவாரண நிதி மட்டுமல்ல, நலத்திட்டங்களுக்கான நிதியையும் மத்திய அரசு தருவதில்லை. குஜராத் முதல்வராக இருந்த போது மாநில அரசின் உரிமைகளைப் பற்றி பேசிய மோடி, பிரதமராக இருக்கும் போது மறந்துவிட்டாரா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.