பல்லடத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று மாலை முதல் அதிக காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று பெய்த கனமழையால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அருள்புரம், கரைப்புதூர், பொங்கலூர், கேத்தனூர் , வாவிபாளையம் அவிநாசிபாளையம் காரணம் பேட்டை போன்ற பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் உள்ள மரங்கள் சாய்ந்தும் வீடுகள் இடிந்தும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இதுவரை அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மேலும் தங்களுக்கான உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிப்படைந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




