• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பாகிஸ்தானில் கனமழை.. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது…

Byகாயத்ரி

Aug 29, 2022

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது.

பாகிஸ்தானில் பருவமழையானது தீவிரமாக பெய்த காரணத்தினால் அங்கு வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பருவமழையானது கடந்த இரண்டு வாரங்களாக வரலாறு காணாத அளவில் கடுமையான மழைப்பொழிவை ஏற்படுத்தி வெள்ளபெருக்கை உண்டாக்கியுள்ளது. இதன் காரணமாக சிந்த், பலுசிஸ்தான் , கைபர் பக்துங்கா உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் பாதிப்பால் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின் அடிப்படையில் இதுவரை 1033 பேர் பாதிப்பு வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 119 உயிரிழப்புக்கள் என்பது கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. 9.49 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 7 லட்சம் கால்நடைகள் வெள்ள பாதிப்பில் உயிரிழந்துள்ளனர்.