தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் விருதுநகர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

இன்று அதி காலை மூன்று மணி முதல் சாரல் மழை பெய்து ஆறு மணிக்கு மழை நின்றது . மழை நின்ற பின்பு விருதுநகர் அரசு மருத்துவமனை சாலை, கல்லூரி சாலை, அருப்புக்கோட்டை சாலை போன்ற பகுதிகளில் திரளாக வந்த பனி மூட்டம் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.