• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டத்தில் கன மழை..,

ByG. Anbalagan

Apr 18, 2025

நீலகிரி மாவட்டத்தில் அதிகாலையில் இருந்து அவ்வபோது மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்பட்டது .

கோத்தகிரி, பாண்டியன்பார்க், கட்டபெட்டு, அரவேனு , டானிங்டன், ஒரசோலை அதன் சுற்றுப் வட்டாரப் பகுதிகளில் மதியத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது கண மழை காரணமாக நகர்ப்புறத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் கோத்தகிரியில் இருந்து குன்னூர் மற்றும் உதகை செல்ல மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எறியப்பட்டவாறு வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கோத்தகிரியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வெளியே வராமல் முடியாமல் தங்கும் விடுதியில் முடங்கி உள்ளனர்.

மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் உள்ளனர்.