• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இடி, மின்னலுடன் டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை!

ByP.Kavitha Kumar

Jan 10, 2025

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை(ஜனவரி 11) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடதமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இன்று (ஜனவரி 10) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.

மேலும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதே போன்று நாளை (ஜனவரி 11) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.