• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது!!

Byஜெ.துரை

Mar 13, 2024

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது.

ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மனதைக் கவரும் இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது.

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘ஏ டெலி பேக்டரி’ நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்போது “ஹார்ட் பீட்” சீரிஸை,டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது