• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பெல்ஜியத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு இதய வடிவ சாக்லேட் விற்பனை..

Byகாயத்ரி

Feb 12, 2022

உலகம் முழுவதும் காதலர் தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். காதலை வெளிப்படுத்தவும், காதலர்கள் அன்பை பரிமாறவும் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் முக்கிய நாள்களில் காதலர் தினமும் முக்கியமானது.

இதையொட்டி, உலக அளவில் பூக்கள் வர்த்தகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள கொலம்பியாவில், ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல், தமிழகத்தின் ஊட்டியில் இருந்தும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ரோஜா உள்ளிட்ட பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே, காதலர் தினத்தையொட்டி, பெல்ஜியம் நாட்டில் புகழ்பெற்ற கடை ஒன்றில் இதய வடிவத்தில் தயாராகி வரும் சாக்லெட்டுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரசல்ஸ் நகரைச் சேர்ந்த பெர்னார்டு ஸ்காப்பன்ஸ், சுவையான சாக்லெட்டுகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்றவர். சாக்லெட் தயாரிப்பு குறித்த போட்டிகளில் தொடர்ந்து விருதுகளை வென்று வருபவர்.

இவரது கடையில், காதலர் தினத்தையொட்டி, இதய வடிவத்தில் சாக்லெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சுவைகளுடன் பல்வேறு வண்ணங்களுடன் பெர்னார்டு தயாரித்துள்ள இதய வடிவ சாக்லெட்டுகள், பிரசல்ஸ் நகர மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.