காரைக்காலில் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானதில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சுப்பராயபுரம் பகுதியில் சேர்ந்த அசோக் குமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி வந்தார்.
தற்போது அவர் தலைமை காவலராக பதவி உயர்வு பெற்று போக்குவரத்து காவல்துறையில் பணி செய்து வந்த நிலையில், நேற்று பிற்பகல் காரைக்காலில் இருந்து வீடு திரும்பும் போது, திருநள்ளாறு செல்லும் வழியில் பிடாரி கோயில் அருகில் உள்ள வளைவில் திரும்பும்போது வாகனத்தின் ஹேண்ட்பேர் செயலிழந்து வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததால் அருகில் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானார்.

இதனை அடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போக்குவரத்து காவலரே சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு சமீபத்தில் திருமணம் ஆகி ஒன்றரை வயதில் குழந்தை இருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.