உலக நாடுகளுக்கு இடை விடாது சுற்றுப்பயணம் செல்பவர் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து உள்ளார். இதில் பெரிய முக்கியத்துவம் இல்லை.

முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து ஓய்வு எடுக்காமல் வெளியில் இருந்தால் என்ன பணிகள் செய்வாரோ அந்த பணிகளை மருத்துவமனையில் இருந்தபடியே செய்து வந்தார். டிஸ்சார்ஜ் செய்யபட்டு தொடர்ந்து பணிகளை செய்வார்.
தமிழகத்தில் வாழ்வாதாரங்களில் போராடி வெற்றி பெற்றேனோ அவற்றை மக்களுக்கு நினைவுப்படுத்த 8 இடங்களில் பேசுகிறேன்.
தூத்துக்குடியில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ஸ்டெர்லைட் வெளியேற்றம் என கூட்டம். நாங்கள் பங்கேற்று வெற்றி பெற்ற பிரச்சனைகள் குறித்து 8 இடங்களில் நினைவுப்படுத்தி பேச உள்ளேன். அண்ணா பிறந்த நாள் மாநாடு திருச்சியில் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.