கோவை மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் மற்றும் TEA இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் இன்று துவங்கி உள்ளது.
இந்த விழாவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாடு முழுவதும், மக்கள் பயன்படுத்துகின்ற பயன்பாட்டு சாதனங்கள் பொருட்கள் என அனைத்திற்கும் அதிகமான வரிக் குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் வாங்குவது, பெறுவதும் என்பது அதிகமாக துவங்கும். இதன் வாயிலாக பொருளாதார வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது.
உலக அளவில் இருக்கக் கூடிய பல்வேறு நிதி நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதாரம் ஜி.எஸ்.டி வரி குறைப்பினால் அதிக வளர்ச்சியை நோக்கி செல்லும் என கணித்து இருக்கிறார்கள்.

நம்முடைய ஏழை மக்களுக்கு, உணவுப் பொருட்களுக்கு எவ்வளவு வரி குறைகிறது என்பதால், எவ்வளவு விலை குறைந்து இருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு அதிக அளவில் எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. பா.ஜ.க வை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.பி அதிகாரிகள் என அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஊடகத்தின் வாயிலாக பொதுமக்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறோம், இவ்வளவு நாள் நீங்கள் வாங்கிய பொருள்களின் விலை உங்களுக்கு தெரிந்து இருக்கும், அதே போல நீங்கள் கடைகளுக்கு செல்லும் பொழுதும் விலை எவ்வளவு குறைந்து இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இந்த பலன் என்பது நம் வாங்க கூடிய பொருட்களின் விலை குறைப்பு என்பது மட்டுமல்ல, உற்பத்தி பெருக்கம் வாங்கும் தன்மை அனைத்தும் அதிகரிக்கும். இதனால் நாடு முழுவதுமே ஒரு வளர்ச்சியான சூழ்நிலைக்கு செல்ல முடியும். ஜி.எஸ்.டி அமல்படுத்திய பிறகும் ஆட்சி அமைத்த ஒரே பெருமை நரேந்திர மோடி அவர்களுக்குத் தான் சேரும். நாட்டின் உடைய வரி என்பது ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காக செயல்படக் கூடியதாக இருக்கிறது. அதன் பிறகு மக்களுக்கு எப்படி எல்லாம் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய வரி சீர் திருத்தத்தை கொண்டு வந்து இருக்கிறார். கோவை மாவட்டத்தின் டெக்ஸ்டைலை எடுத்துக் கொண்டால்,
விற்பனைக்கு வரக் கூடிய பவர்லூம் பொருட்கள் ஆகட்டும், நிட் என அனைத்தும் ஐந்து சதவீதமாக மாறிவிட்டது.
டி-ஷர்டில் இருந்து புடவை வரை 5% வரியாக மாறி விட்டது. இதனால் தீபாவளிக்கு புடவை வாங்கும் பெண்கள் விலை குறைந்து இருப்பதால் கூடுதல் துணிகளை வாங்க முடியும்.
ஒவ்வொரு விஷயத்தையும் இந்த வரிக்குறைப்பு என்பது பலனளிக்கும் வகையில் இருக்கிறது. இதற்குக் காரணமான பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் நன்றி செலுத்துகிறோம்.
ஜி.எஸ்.டி வரிகளை எப்படி ? இதை அமல்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக, பாரதிய ஜனதா தலைவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பார்வையிடுவார்கள்.
ஏற்கனவே அதிக வரி கொடுத்து ஸ்டாக் வாங்கி வைத்து இருப்பவர்கள், பாதிக்கப்படுவதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு,
இதுகுறித்து அந்தந்த டிபார்ட்மென்ட்களில் என்ன ? நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு பின்னர் கூறுவதாக கூறினார்.
வரி சீர் திருத்தம் நேற்றில் இருந்து அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இன்னும் சில கடைகளில் விலை குறைப்பு இல்லாமல் இருக்கிறதே என்ற கேள்விக்கு,
இது குறித்து மத்திய அரசாங்கத்திடம் பேசப்படும், மாநில அரசு தான் இதை முன் இருந்து செய்து கொடுக்க வேண்டும். ஆனால் நம் முதல்வர் இது பற்றி எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார். மாநில அரசு அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து இருப்பதற்கு நன்றி, ஆனால் மாநில அரசு தான் இதை முன் நின்று செய்ய வேண்டும் அப்பொழுது தான் ஏழை, எளிய மக்களுக்கு இது முழுமையாக சென்றடையும். மாநில அரசிற்கு இதில் அதிக பொறுப்பு இருக்கிறது, முதல்வர் இதை பி.ஜே.பி க்கு எதிரான அரசியலாக பார்க்காமல், களத்தில் இறங்கி இதை சரி செய்து கொடுக்க வேண்டும் என கூறினார்.
எட்டு ஆண்டுகளாக குறைக்காமல் இப்பொழுது குறைப்பதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு,
ஒவ்வொரு மாநிலங்களுக்கும், ஒவ்வொரு வரி விதிக்கப்பட்டு இருக்கிறது, நாம் இங்கு இருந்து செல்லும் போது அந்த செக் போஸ்ட்களில் வேறுபடுகிறது.
வாங்குவது விற்பது என அனைத்திற்கும் ஒரே வரி இல்லாததால், ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு இடங்களில் வெவ்வேறு விலை வைத்து விற்கப்படுகிறது.
இதனால் வியாபாரிகள் விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று ஒரே நாடு, ஒரே வரி என்ற சீர்திருத்தத்தால், ஆன்லைன் டேக்ஸ் என்பதில் ஒரு மாற்றம் வந்து இருக்கிறது.
ஆரம்பத்தில் நான் இதை அமல்படுத்தும் போது, நிறைய சிக்கல்கள் இருந்தது. ஜி.எஸ்.டி tax நெட்டுக்குள் வரும் நபர்கள் அதிகரிக்க அதிகரிக்க நமக்கு வருமானம் அதிகரித்தது. அரசாங்கம், நாலு வருட காலத்தில் இவ்வளவு வரி என்பதை உறுதிப்படுத்தும் சூழல் வந்தது. அதனால் தைரியமாக சில முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. ஆண்டு வருமானம் 12 லட்சம் வரை உயர்த்தப்பட வேண்டும். ஏனென்றால் வரி வருவாய் நமக்கு குறைந்தால் கூட, ஜி.எஸ்.டி ரெவென்யு வாயிலாக அரசாங்கத்தின் எந்த செலவையும் குறைக்க வேண்டிய தேவையில்லை. நாம் எங்கேயும் அடி வாங்க தேவையில்லை. நாம் கட்டும் வரிகளால் தான் இன்று நிறைய உள் கட்டமைப்புகள் வந்து கொண்டு இருக்கிறது.
காங்கிரஸ் சொல்வது போன்று, எவற்றில் எல்லாம் அதிக வருமானம் வருகிறதோ ? அதையெல்லாம் எடுத்து பாக்கெட்டில் போடும் பழக்கம் பி.ஜே.பி க்கு இல்லை. காங்கிரஸ் போல ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு அமைச்சர் மீதும் இல்லை. வந்த ஜி.எஸ்.டி வருமானங்கள் அனைத்தும் திட்டங்களாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.
ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் வரை இலவசமான மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. 11 கோடி பெண்களுக்கு இலவச கேஸ் கனெக்சன் வழங்கப்படுகிறது. நாலு கோடி மக்களுக்கு இலவச வீடுகள் கிடைத்து இருக்கிறது. ஆனால் இன்று ஓரளவுக்கு ஜி.எஸ்.டி வருமானத்தை stabilize செய்து விட்டோம்.. 50 கோடி இழப்பு வந்தால் கூட இப்பொழுது நம்மலால் ஈடுகட்ட முடியும் என்ற அளவுக்கு நாம் உயர்ந்து விட்டோம்.. அதனால் இந்த பலனை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என அரசு நினைக்கவில்லை, ஒவ்வொரு இந்தியருக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக வரி விளக்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் போல எதுலெல்லாம் வருமானம் பார்க்க முடியும் ? என்பதை பார்த்து தன்னுடைய சொந்த வளத்தை வளர்த்துக் கொள்ளும் சூழல் இல்லாமல், நாட்டு மக்களுக்கு என்ன ? கொடுக்க முடியும் என்பதை மோடி யோசித்துக் கொண்டு இருக்கிறார்.
நேற்று நீங்கள் வெளியிட்ட வீடியோவில் சிலர் விமர்சனம் சொல்லி இருக்கிறார்களே என்ற கேள்விக்கு,
வரியே வேண்டாம் என்று சொன்னால் அரசாங்கத்தை யார் ? நடத்துவது, தற்பொழுது வரி கட்டுவதை பெருமையாக இந்தியர்கள் சொல்லக் கூடிய நிலைமைக்கு பிரதமர் மோடி கொண்டு வந்து இருக்கிறார்.
நான் ஒரு டாக்ஸ் கட்டும் நபர், நான் தேசியத்திற்காக கொடுக்கிறேன் என்று மன நிலமை அனைவருக்கும் வந்து இருக்கிறது. புரிதல் இல்லாதவர்கள் ஏதாவது இதுபோல கமெண்ட் செய்து கொண்டு இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்று கூறினார்.
பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி விலக்குகள் கொண்டு வரப்படுமா ?
முதற்கட்டமாக ஜி.எஸ்.டி வரி குறைப்பிற்காக அனைத்து மாநிலங்களையும் ஒத்துழைக்க வைத்து அமல்படுத்தி விட்டோம். ஜி.எஸ்.டி வரி பெருகப் பெருக, அடுத்த கட்டமாக பெட்ரோல், டீசல் விலைகளும் குறைய வாய்ப்பு உள்ளது. மாநில அரசாங்கள் சேர்ந்துதான் ஜி.எஸ்.டி முடிவை எடுக்க முடியும்.
நேற்று நீங்கள் கடைகளில் சென்று ஆய்வு செய்வீர்களே அங்கு ஜி.எஸ்.டி எப்படி ? அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்று கேள்விக்கு,
ஜி.எஸ்.டி இம்பாக்ட் சாதாரண மக்களுக்கு உடனடியாக, தெரிய வரவில்லை. தற்போது தான் தெரிய வந்து இருக்கிறது. இனிமேல் தான் பொருட்கள் வாங்கும் போது அது தெரியும் என்று கூறினார்கள். நேற்று முதல் நாள் என்பதால் பெரிதாக தெரியவில்லை, ஆனால் மோடி குறைத்து இருக்கிறார் என்பது அவர்கள் புரிந்து வைத்து இருக்கிறார்கள். அதனால் தான் முடிந்த அளவிற்கு நிறைய இடங்களுக்கு சென்று நாங்கள் விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இதை விளம்பரப்படுத்தாமல் இருக்கிறார்கள் அதற்கான கோரிக்கையும் அவர்களிடம் வைத்து விட்டு வந்து இருக்கிறோம். தொழில் வர்த்தக சபை வியாபார வர்த்தக நிறுவனம் போன்றவைகளிடம் நாங்கள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை வைது இருக்கிறோம்..

அமேசான் போன்ற நிறுவனங்களில் முதல் பக்கத்திலேயே அது குறித்து அவர்களே விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். டீ, காபி விலையேற்றம் குறித்து அதிகாரிகளுடன் விரைவில் பேசி விலை குறைக்க முடியுமா ? என ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தமிழக தேர்தல் களம் குறித்த கேள்விக்கு,
தி.மு.க, தமிழக வெற்றி கழகம் என்பதை விஜய் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார். வேறு யாராவது இதைப்பற்றி சொன்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
தி.மு.க வுக்கு எதிராக, தி.மு.க வை வீழ்த்துகின்ற ஒரே சக்தி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே. வேறு யாராலும் வீழ்த்த முடியாது..
பா.ஜ.க விற்குள் கோஷ்டி பூசல் இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளிவருகிறது என்ற கேள்விக்கு,
முதலில், பா.ஜ.க வில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. கூட்டணியில், வரக் கூடிய விமர்சனங்கள் , தேசிய ஜனநாயக கூட்டணிகை பலப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய தேசிய தலைமை எங்களுக்கு கொடுத்தது.. இதை யாரும் பலவீனப்படுத்த விரும்பவில்லை. இது போன்ற கேள்விகளுக்கு நான் எதுவும் கூற விரும்பவில்லை. மாநில தலைவருக்கு இருக்கக்கூடிய பொறுப்பை வைத்து அவருடைய வேலையை அவர் செய்து கொண்டு இருக்கிறார். அழகாக கூட்டணியை எடுத்துக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை அவர்களும் எங்களை பலப்படுத்துவதற்காகவே அனைவருடன் பேசிக் கொண்டு இருக்கிறார் என கூறினார்..