• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர் இவர்தான்..

ByA.Tamilselvan

Jul 9, 2022

அதிமுகவுக்குள் ஒற்றைதலைமை பிரச்சனை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. மேலும் நாளை மறுநாள் பொதுக்குழு நடக்குமா நடக்காதா என பரபரப்பில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்பும் பொதுக்குழு நடைபெற உள்ள சில நிமிடங்களுக்கு முன்பே வர உள்ளது.
இந்நிலையில் அதிமுகவை கைப்பற்றி பொதுச்செயலாளர் ஆக இபிஎஸ்,ஓபிஎஸ் வரப்போவதில்லையாம். ஓபிஎஸ்,இபிஎஸ் பிரிவை கட்சிக்குள் உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான விதையே வேலுமணிதான் எனக் கூறியுள்ளார் மருதுஅழகுராஜ். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சி குழப்பங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி முதல்வர் வேட்பாளராகத் தேவையான அத்தனைக் காய்களையும் நகர்த்தி வருகிறாராம் . இது ஏற்கனவே அதிமுகவுக்குள் நடக்கும் குழப்பத்தை மேலும் அதிகமாக்கும் என தெரிகிறது.