• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சேவை செய்து அமைச்சர் பதவியை பெற்றுள்ளார்..,

ByKalamegam Viswanathan

Jun 20, 2025

தனது அமைச்சர் பதவி காப்பாற்றிக்கொள்ள எடப்பாடியார் மீது கேலி சிதரத்தை வெளியிட்ட ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் மீது அவதூறு ஏற்படுத்து வகையில், பொய்யான செய்திகளோடு ,கண்ணியத்தை குறைக்க வகையில் கேலிச்சித்திரத்தை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் அமைச்சர் டி.ஆர். பி.ராஜா தனது X தளத்தில் வெளியிட்டு இருந்தார், இதனை தொடர்ந்து அமைச்சர் ராஜா மீதும் அதை பகிர்ந்தவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி, ஆபாச கேலிச்சித்திரத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு அளித்தார் அவருடன் மாவட்ட பொறுப்பாளர் தண்டரை மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன், தமிழரசன், மாணிக்கம் மற்றும் மாநில நிர்வாகிகள் தனராஜன், வெற்றிவேல், வக்கீல் தமிழ்ச்செல்வன், வக்கீல் திருப்பதி, வக்கீல் துரைப்பாண்டி, வக்கீல் மகேந்திர பாண்டி உட்பட பலர் இருந்தனர்

செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது;

கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு முதன் முதலில் நிதி ஒதுக்கி திட்டங்களை செய்திட்டவர்
எடப்பாடியார் ,ஆனால் அவரைப் பற்றி விமர்சித்து அருவருக்கத்தக்க வகையில் எடப்பாடியாரை பற்றி கேலி சித்திரத்தை மக்கள் சேவை என்னவென்று தெரியாத சாராய ஆலை அதிபர், சேது சமுத்திரத் திட்டத்தில் கடலிலே மண்ணை அள்ளி கடலில் போட்டு கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து மக்களை ஏமாற்றிய கப்பல் முதலாளி அமைச்சர் ராஜா வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ராஜா நிர்வகித்துவரும் திமுக ஐ.டி.விங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்றைக்கு எடப்பாடியார் என்ற எளிய மனிதர் இன்றைக்கு ஆளும் அரசின் குறைகளை நாள் தோறும் சுட்டிக்காட்டி வருவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல், பதில் சொல்ல முடியாமல் இன்றைக்கு தனி நபர் விமர்சனத்தை திமுக இறங்கி உள்ளது.

இன்றைக்கு மக்கள் உழைப்பை திருடி வரும் திமுக கார்ப்பரேட் கம்பெனியில் அமைச்சர பதவியைப் பெற்ற ராஜா தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் நேசிக்கும் தலைவரான எடப்பாடியாரை பற்றி விமர்சித்து வருகிறார்.கடந்த நான்கரை ஆண்டு காலம் மக்களுக்கான எந்த திட்டமும் ஸ்டாலின் செய்யவில்லை, அதனால் அதை திருப்ப அவதூறு செய்தியை தான் பரப்பிகிறார்கள்

இதே சட்டமன்றத்தில் தனக்குத்தானே சட்டையைவேட்டி ஸ்டாலின் கிளித்துக்கொண்டார், ஸ்டாலின் வேட்டியை உருவது போல கேலிச்சித்திரம் எங்களால் காட்ட முடியும் ஆனால் மக்களே இது நேரடியாக பார்த்து விட்டார்கள்
அது எங்களுக்கு தேவையில்லை.

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு முதன் முதலாக நிதியை ஒதுக்கி அந்த பணியை தொடங்கி எடப்பாடியார் இது திமுகவின் கொத்தடிமைகளுக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை,. அமைச்சர் ராஜாவிற்கு கமிஷனை எண்ண கூட நேரமில்லை ,சாராய ஆலையில் வரும் பணத்தையும், சேது சமுத்திரத்தில் கொள்ளையடித்த பணத்தையும் எண்ண கூட அவருக்கு நேரமில்லை,இன்றைக்கு மக்கள் சேவையை மறந்து, கருணாநிதி குடும்பத்திற்கு சேவை செய்து அமைச்சர் பதவி பெற்றுள்ளார் சாராய ஆலை அதிபர் ராஜா.

இன்றைக்கு அரைவேக்காடு தனமாக கொத்தடிமையுமாக உள்ள அமைச்சர் ராஜாவிற்கு உரக்கச் சொல்கிறேன், கீழடி அகழ்வாராய்ச்சிக்கு 2018 ஏப்ரல் 18 அன்று 55 லட்சம் நிதி ஒதுக்கி பணி தொடங்கப்பட்டது, இதில் 34 அகழ்வாராய்ச்சிகள் குழிகளாக அமைக்கப்பட்டது, தொடர்ச்சியாக உலக தர வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க 12. 21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ,உங்களுக்கு சந்தேகம் என்றால் இன்றைக்கு நிதி துறை செயலாளராக இருக்கும் உதயசந்திரனை கேட்டு பாருங்கள் அவருக்கு எல்லா விஷயம் தெரியும், இன்றைக்கு அமைச்சர் ராஜா மக்கள் பணிக்கு லாயக்கு இல்லாதவர், இன்றைக்கு எடப்பாடியாரை பற்றி குறை சொல்ல, எந்த வித யோகிதையும்தகுதியும் கிடையாது

இன்றைக்கு கீழடிகாக எதற்காக போராட்டம் என்று தெரியாமல் திமுக போராட்டம் செய்கிறார்கள் இன்றைக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார்களே நாடாளுமன்றத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் ?

மக்களை இனி திமுக என்ற நாடக கம்பெனி ஏமாற்ற முடியாது, இன்றைக்கு எடப்பாடியார் மீது போட்ட பதிவுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

நீங்கள் பதிவு போட வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் நடைபெறும் போதை பொருள் ,பாலியல் போன்ற சம்பவங்களுக்கு கார்ட்டூன் போடுங்கள்? இன்றைக்கு கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் பலியாகி ஓராண்டு ஆகிவிட்டது அதற்கு நீங்கள் கார்ட்டூன் போடுங்கள்? நீங்கள் நடத்தும் சாராய ஆலையை பற்றி கார்ட்டூன் போடுங்கள் ?

தொடர்ந்து இதுபோன்று பதிவு செய்தால் நீங்கள் நடமாட முடியாத அளவில் முற்றுகைபோராட்டம் நாங்கள் நடத்துவோம்.

தற்போது மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் பிரிவு 66, பிரிவு 67 ,பிரிவு 69 ஏ மற்றும் 2023 கீழ் 356 பிரிவின் கீழ் எடப்பாடியார் மீது அவதூறு பதிவினை எக்ஸ் தளத்தல் பதிவு செய்ய திமுக ஐ.டி .விங் மாநில செயலாளர் அமைச்சர் டிஆர்பி ராஜா மீதும், மற்றும் அதனை பதிந்தவர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆபாச கேலி சித்திரத்தை உடனே நீக்க வேண்டும் என்று புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு எடப்பாடியாரை பற்றி வெளியிட்ட கேலி சித்திரத்திற்கு தொண்டர்கள் மன வேதனை அடைந்து, கொதித்து போய் உள்ளார்கள். இன்றைக்கு இரண்டு பக்கமுள்ள தொண்டர்களுக்கு மோதலால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் போராட்டம் செய்ய தயாராக இருக்கிறோம்.

கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு நிராகரிக்கப்பட்டால் அதிமுக அதற்கு போராடும் என்று எடப்பாடியார் ஏற்கனவே தெரிவித்துவிட்டார், ஆனால் ஸ்டாலின் இங்கே மாவீரன் போலவும்,டெல்லியில் வேஷம் போட்டு சமாதான கொடியை பறக்கவிட்டு இரட்டை வேடம் போடுகிறார். இன்றைக்கு எடப்பாடியாரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் அனைத்து நல்ல உள்ளங்களையும் நாங்கள் வரவேற்போம் எனக் கூறினார்.