• Sat. Apr 27th, 2024

தமிழகத்தில் முழு ஊரடங்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதா?

முழு ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில், நேற்று ஒரே நாளில் 23,975 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதேசமயத்தில் கடந்த இரு ஞாயிற்றுக் கிழமையும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் தொற்று பரவல் வேகம் மிகுதியாகக் குறைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா சிகிச்சைக்காகத் தமிழகம் முழுவதும் 1,91,902 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகரித்தபோதிலும், மருத்துவமனைகளில் இதுவரை 8,912 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பைத் தவிர்க்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பின் விளிம்புக்குச் செல்லத் தேவையில்லை. ஒமிக்ரான் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். இதை மக்கள் உணர வேண்டும். வரும் ஜனவரி 22ஆம் தேதி 19ஆவது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது.


ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் தொற்றுப் பரவல் வேகம் மிகுதியாகக் குறைந்துள்ளது. பொதுமக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *