கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எடுக்கப்படும் முதல் படத்தில் ஹரிஷ்கல்யாண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட தயாரிப்பில் இறங்க இருப்பதாகவும், அவர்களின் முதல் திரைப்படமே நடிகர் விஜய்யின் திரைப்படம் தான் என சொல்லப்பட்டது.மேலும் சில மாதங்களுக்கு முன் கூட தோனி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் சந்தித்து பேசினார். விஜய்யின் திரைப்படத்தை தயாரிக்க அணுகியபோது அவர் மூன்று வருடங்கள் கால்ஷூட் மற்ற நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது தோனி தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இதனால் நடிகர் ஹரிஷ் கல்யான் நடிக்கும் திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம் உடனே திரைப்பட தயாரிப்பில் இறங்க திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.







; ?>)
; ?>)
; ?>)
