இயேசு உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாளாக கொண்டாடி வருகின்றனர். தேவன் இயேசு உலக மக்களுக்காக பாவச்சிலுவையை சுமந்து, கல்வாரி மலைமீது சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தார்.

அன்றிலிருந்து மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த இயேசு பிரான் உலகில் மரணமும் நிரந்தரமில்லை என்பதை நிரூபித்தார். மரணத்தையும் வெல்லமுடியும் என்பதை மெய்ப்பித்தார். இயேசுவின் சிலுவைப்பாடுகளை உணரும் விதமாக 40 நாட்கள் தவக்கால வாழ்க்கை மேற்கொண்ட கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு உயிர்த்தெழுந்த திருநாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய நாளில் தவக்கால நாட்களில் கிறிஸ்த மக்களின் பிரார்த்தனைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் அருளால் நிறைவேற்றப்படவும், அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெருகவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.