• Thu. May 9th, 2024

கேரளாவில் மூக்கு மூலம் வாக்களித்த மாற்றுத்திறனாளி இளைஞர்

Byவிஷா

Apr 27, 2024

கேரளாவில் நேற்று நடைபெற்ற 2ம் கட்ட மக்களவைத் தேர்தலில், மாற்றுத்திறனாளி ஒருவர் மூக்கு மூலம் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்.26) கேரளா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று (ஏப்.26) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த 18 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் அசிம் மூக்கின் மூலம் தனது முதல் வாக்கினை செலுத்தினார். 90 சதவீத மாற்றுத்திறனாளியான அசிமுக்கு இரண்டு கைகள் கிடையாது.
ஒரு காலில் குறைபாடு, தாடை பற்கள், வாய் மற்றும் செவிப்புலன் பிரச்சினைகளாலும் அசிம் அவதியுற்று வருகிறார். இருப்பினும், தனது முதல் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றி தேசிய அளவில் அசிம் கவனம் ஈர்த்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *