• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கைப்பற்றிய ஹம்சினி என்டர்டெயின்மெண்ட்!

Byமதி

Dec 16, 2021

வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கடுமையான போட்டிக்கு நடுவில் ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியுள்ளது.

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இரு தினங்கள் முன்பு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. அதில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் படம் மீதான மைலேஜை அதிகப்படுத்தியுள்ளது.

வலிமை 2022 ஜனவரியில் பொங்கல் ஸ்பெஷலான வெளியாகிறது. அதே நாளில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமும் வெளியாகிறது. இதனால் விநியோக உரிமையை கைப்பற்றுவதில் விநியோக உரிமையாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், வலிமை படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வாங்கியிருந்தார். இது தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிட்டன. இந்நிலையில் வெளிநாடுகளுக்கான விற்பனை தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை தவிர்த்துப் பார்த்தால் தமிழ் படங்கள் அதிகம் வசூல் செய்வது வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா. இந்த இருநாடுகளின் வலிமை திரையரங்கு விநியோக உரிமையை கடும் போட்டிக்கு நடுவில் ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளது. அத்துடன் பிரான்ஸ் நாட்டின் விநியோக உரிமையையும் இந்நிறுவனமே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.