• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இன்று முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு..!

Byவிஷா

Sep 27, 2023

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றும் இதில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு என மொத்தம் ஆயிரம் பேருக்கு இளங்கலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.