• Fri. May 3rd, 2024

வாகன சோதனையின் போது, 12 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்…,

ByKalamegam Viswanathan

Oct 30, 2023

இராஜபாளையத்தில் வாகன சோதனையின் போது காவல்துறை சார்பு ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்க்காமல் சென்ற சொகுசு கார் சாத்தூரில் பிடித்த போலீசார் 12 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்தது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளி அருகே காவல்துறை சோதனை சாவடி உள்ளது. இதில் இன்று காலை இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸ் சார் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சார்பு ஆய்வாளர் கௌதம் விஜி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சென்னை பதிவு என் கொண்ட சொகுசு கார் சார்பு ஆய்வாளர் கௌதம் விஜி மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது. போலீஸ் சார் பின்தொடர்ந்தும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள காவல் துறை கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாகனத்தை விரட்டி போய் சாத்தூரில் பிடித்து சோதனை செய்த போது காரில் 600 கிலோ கொண்ட 51 பண்டல்களில் சுமார் 12 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து ராஜஸ்த்தான் பகுதியை சேர்ந்த முகமது அஸ்லாம் மற்றும் சதன்சிங் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசியில் இருந்து வந்த சொகுசு கார் எந்த ஊருக்கு செல்கிறது குட்கா எங்க இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது எந்தெந்த ஏரியாவில் விற்பனைக்கு எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.

சாத்தூரில் பிடித்த குட்காவின் மதிப்பு 20 லட்சம் என தெரிவித்த போலீசார் தற்போது 12 லட்சம் என தெரி விக்கின்றனர் வரும் வழியில் 8 லட்சம் மதிப்பிலான குட்கா எங்கே போனது என கேள்வி எழும்பி உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *