கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டான் கோவில் ரோடு, அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று ஆலய மண்டபத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நவகிரகங்களுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது .

மேலும் இன்று மதியம் 01.19 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆவதை ஒட்டி குரு பகவானுக்கு பல்வேறு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, பின்னர் சுண்டல் மாலை உள்ளிட்ட மாலைகள் அணிவித்து பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் குரு பகவானுக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
தொடர்ந்து ஆலயத்தில் சரியாக 01.19 மணி அளவில் மகா தீபாராதனை காட்டப்பட்டு, கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற குரு பகவான் குரு பெயர்ச்சி விழாவை ஒட்டி ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து குருபகவானை மனம் உருகி வழிபட்டுச் சென்றனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.