• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேசியக் கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்!!

ByA.Tamilselvan

Aug 1, 2022

75வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகளில் தேசியகொடியேற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
75ஆவது சுதந்திர தினவிழா வருகிற 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினவிழா அன்று தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்கப்பட வேண்டும். கொரோனா சூழ்நிலையை பொறுத்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்யலாம்.
நேரடியாக நடக்கும் நிகழ்வில் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தேசிய போர் நினைவிடம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் அது தொடர்பாக தகவல்களை அன்றைய தினம் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.