• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குரூப் 2, 2ஏ நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு

Byவிஷா

Feb 3, 2024

கடந்த 2022 மற்றும் 2023ல் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் 2 ஏ பணிநிலை குரூப் 2, 2ஏ-க்கான தேர்வு கடந்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதன்மை தேர்வுகள் நடைபெற்றது. ஆனால் இந்த தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து டிஎன்பிஎஸ்ஸி தேர்வாணையம் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி நேர்முகத் தேர்வு உடைய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பதிவெண்களை மட்டும் வெளியிட்டனர்.
இந்நிலையில் நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்ஸி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.