• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து (தீ) பூமித்து இறங்கி தங்களது நேற்றிகடனை செலுத்துவார்கள். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 30ஆம் தேதி கணபதி ஹோமம் யாகசாலை வேத பாராயணங்களுடன் தொடங்கியது. 1997 ஆம் ஆண்டு இந்த திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் இன்று காலை 7.35 மணிக்கு நடைபெற்றது.வேதா பாராயணங்களுடன் தீர்த்த நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாரியம்மன் கருவறை கலசத்தில் ஊற்றப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் முன்னிலையிலும் திருக்கோவில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன.

மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்புக் கருதி சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.