தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, மீனாட்சிபுரம் ஸ்ரீ கோகுலம் அன்னதான வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ராமபிரான், சிவபெருமான் கோவிலில், ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மகாகும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு 408 வகையான உணவுகள் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேக விழா தலைமை சுப்பையா வழகினார்.
வரவேற்புரை ஸ்ரீ கோகுலம் அன்னதானம் கோவில், அணு மற்றும் கதிரியக்க வேதியியல் விஞ்ஞானி நிறுவனர் உமாகாந்தன் தெரிவித்தார்.
இந்த மகா கும்பாபிஷேக விழாவில் முன்னிலை தேனி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்களும் பக்தகோடிகளும் திரளாக கலந்து கொண்டு கடவுளின் அருள் ஆசி பெற்று சென்றனர்.