• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உதகையில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்

உதகையில் பிரம்மாண்டமாக கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் .குவிந்தனர்.
உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் குடிலை தங்களது வீடுகள் மற்றும் கிறிஸ்துவ ஆலயங்களில் அமைத்து வருகின்றனர். மேலும் தங்களது வீடுகளில் நட்சத்திர விளக்குகளை தொங்க விடுகின்றனர்.தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருட்களையும் வழங்குவார். இதனால் கிறிஸ்துமஸ் தாத்தாவை குழந்தைகள் எதிர்பார்த்து உள்ளனர்…இந்நிலையில் அனைத்து கிறிஸ்தவர்களின் சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது. உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் தாமஸ் ஆலயத்திலிருந்து கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயம் வந்தடைந்தது.


இந்த ஊர்வலத்தில் ஜாதி, மதம், இனம் இன்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பலூன், இனிப்புகள் போன்றவற்றை கிறிஸ்துமஸ் தாத்தா வழங்கினார். இதனால் உதகை நகரமே கோலாகலமாக
காணப்பட்டது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலத்தை கண்டு களித்தனர்.