• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் முதல் அதிநவீன ‘குகு டென்டல் கிளினிக்’ பிரம்மாண்ட துவக்க விழா!

BySeenu

Jul 3, 2026

பல் மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் முதல் CBCT ஒருங்கிணைக்கப்பட்ட ‘3D ஃபேஸ் ஸ்கேன் இம்ப்ளான்ட்ஸ் சென்டர்’ (3D Face Scan Implants Centre) கோவையில் துவங்கப்பட்டது.​’குகு டென்டல் கிளினிக்ஸ்’ (GUGU DENTAL CLINICS) நிறுவனத்தின் இந்த புதிய கிளை, உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பங்களுடன், உங்கள் புன்னகையை அழகாக்கும் உன்னத நோக்கோடு களமிறங்கியுள்ளது.

இந்த திறப்பு விழாவில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் திவ்யா கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த புதிய மையத்தைத் திறந்து வைத்தார்.​”உங்கள் புன்னகை, எங்கள் உறுதிமொழி” (Your Smile, Our Promise) என்ற தாரக மந்திரத்துடன் துவங்கப்படும் இந்த கிளினிக், கோவை சாய் பாபா காலனி, ராஜா அண்ணாமலை ரோட்டில் உள்ள ‘அப்ஸ்டைல் ஸ்டோர்ஸ்’ (Upstyle stores) கட்டிடத்தின் முதல் தளத்தில் அமையப் பெற்றுள்ளது.

பல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் முகம் சார்ந்த சீரமைப்பு சிகிச்சைகளுக்கு 3D ஃபேஸ் ஸ்கேன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே இந்தியாவிலேயே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குகு டென்டல் கிளினிக்ஸ்’ இயக்குனர்கள் டாக்டர் காயத்திரி ராஜு ,டாக்டர்.பூர்ணேஷ் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.