விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி தமிழ்நாடு கிராம வங்கியில் மத்திய அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் சத்திரப்பட்டி சேர்ந்த பொன் வேல் என்பவரின் மனைவி வேலுத்தாய் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இவர் தமிழ்நாடு கிராம வங்கியில் சத்திரப்பட்டி கிளையில் புதிதாக வங்கி கணக்கு துவங்கிய பொழுது 20 ரூபாய்க்கு விபத்து காப்பீட்டு எடுத்துள்ளார் தற்போது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த வேலுத்தாய் குடும்பத்திற்கு அவரது கணவர்
பொன் வேலிடம் காப்பீட்டுத் தொகை வழங்கிய 2 லட்சத்தை தமிழ்நாடு கிராம வங்கி விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி கிளை சார்பில் வீட்டில் இருந்து வேலுத்தாய் என் கணவர் பொன் வேலிடம் வங்கியின் மண்டல அதிகாரி மற்றும் மேலாளர் மகேஸ்வரி ஊர் பொதுமக்கள் மத்தி அரசு வழிகாட்டுதலின்படி கட்டிய பணம் இருபது ரூபாய் இருந்தாலும் இரண்டு லட்ச ரூபாய் காப்பீடு தொகை பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாக பொன்வேல் தெரிவித்தார் .

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைந்து செயல்பட வேண்டும் என வங்கி மேலாளர் கூறினார். விபத்து காலங்களில் உயிரிழந்தாலோ மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை வழங்க அனைவரும் திட்டத்தில் இணைய வேண்டும் என வலியுறுத்தினார்




