சென்னை மற்றும் சிவகங்கையை மையமாக கொண்டு இயங்க வரும் பிஎஸ்என்ஏ எம்பாட்டிக் பைன் ஆர்ட்ஸ் ஆஃப் மியூசிக் மையத்தின் தொலை தூர தர சான்றிதழ் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் அந்நிறுவனத்தின் முதல்வர் மது சுகுமாறன் சிவகங்கை போதி சர்வதேச சீனியர் செகண்டரி பள்ளியின் தாளாளர் மணிஷ்சத்தியநாதன், மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் உதவி பேராசிரியர் வானதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரிவித்தனர்.இதில் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற கண்ணகியின் நாட்டிய நடன நிகழ்வு நடைபெற்றது. இதில் குழந்தைகள் கலந்து கொண்டு தத்ரூபமாக செய்து காட்டினர்.